‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி உள்ளனர். இப்படத்தை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.
சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்படத்தில் ரஜினியுடன் சமுத்திரகனி, நானா படேகர், அஞ்சலி படேல், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியானது. டீஸர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று யூ- டியூபில் டாப் ட்ரெண்டிங்கில் தற்போதும் உள்ளது.
இந்நிலையில் ‘காலா’ படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வில்லன் வேடத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் நானா படேகர் அவருக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணியை மார்ச் 6 ம் தேதி முடித்துள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக உள்ளது.