இயக்குநர் வெங்கட் பிரபு தனது தனிப்பட்ட வாழ்விலும், சினிமா வட்டாரத்திலும் வலுவான நட்பு வட்டாரத்தைக் கொண்டுள்ளார். நட்பின் சாரத்தை வசீகரமாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கும், ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறார். நட்பைப் பற்றி பேசும் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு அருகில் வந்திருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.வொயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவின் மசாலா பாப்கார்ன் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார்.’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் சென்னை மற்றும் பெரும்பாலான போர்ஷன் சிங்கப்பூரில் மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.