தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான முதல் படமான ‘எக்கடக்கி போத்தாவா சின்னவாடா’ என்ற படம் பெரிய வசூலைக் குவித்ததால் ஐந்து தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த வரவேற்பு குறித்து நந்திதா பேசுகையில், ‘தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘சீனிவாசா கல்யாணம்’ என்ற படத்தில் பத்மாவதி என்ற கிராமிய பின்னணியிலான கேரக்டரில் நடித்திருக்கிறேன்.
குடும்பப் பாங்கான படங்களை தயாரித்து வெற்றி கண்ட தயாரிப்பாளர் தில் ராஜுவின் இந்த படம் எதிர் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த படத்தில் பல வீரதீர காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறேன்.
இதற்கு முன் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து முடித்திருக்கிறேன். தமிழில் வெளியான ‘டார்லிங் 2’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘பிரேம கதாசித்திரம் 2’ படத்திலும் நடித்து வருகிறேன். இதற்கான படபிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது.
தமிழில் வைபவ் உடன் ஒரு படத்திலும், ‘நர்மதா ’ என்ற படத்திலும் நடித்து வருகிறேன். கன்னடத்தில் முன்னணி ஹீரோவுடன் நடிக்க விரைவில் ஒப்பந்தமாகவிருக்கிறேன்.” என்றார்.