‘நட்பே துணை’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார்.
டி.பார்த்திபன் தேசிங்கு படத்தை இயக்குகிறார். இவர் ‘மான் கராத்தே’,’ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர்.
இப்படம் ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் பல ஊர்களுக்கும் சென்று படமாக்கியுள்ளார்கள். இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது. நமது தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதால் ஹாக்கிக்கான பிரதான மைதானத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் நல்ல கதையம்சம் கொண்ட படம் என்பதால் இயக்குநர் சுந்தர்.சி மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் மிகப் பெரிய நடிகர் பட்டாளங்களும் நடிக்கின்றனர்.
இதில் கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.