முதல் வாழ்த்து சொன்னது சிவகார்த்திகேயன்! : சந்தோஷப்படாம இருப்பாரா மா.கா.பா ஆனந்த்?

‘வானவராயன் வல்லவராயன்’ படத்தைத் தொடர்ந்து மா.கா.பா ஆனந்த் நடிப்பில் இந்த மாதம் பிப்ரவரி 15-ம் தேதி ரிலீசாக இருக்கும் படம் ‘நவரச திலகம்’.
ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்க, காம்ரான் இயக்கியிருக்கிறார்.

அச்சு அசலாக அப்படியே சிவகார்த்திகேயன் ரூட்டைத்தான் மா.கா.பா. ஆனந்த்தும் பாலோ செய்கிறார் என்கிற பேச்சுக்குரல்கள் கோடம்பாக்கத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

அதைப்பற்றி கேட்காமல் மா.கா.பாவை விட முடியுமா?

”இதுல ஆச்சரியப்பட ஒண்ணுமில்லை சார், நானும் அவரோட ஷோவான ‘அது இது எது’ நிகழ்ச்சி மூலமாகத்தான் பிரபலமானேன்.

இப்போ அவர் மாதிரியே அடுத்த ஸ்டெப் சினிமாவுல தான் எடுத்து வெச்சிருக்கேன். நான் சினிமாவை தேர்ந்தெடுக்காம வேற ஏதாவது துறையில போயிருந்தேன்னா இப்படி யாருமே ஒப்பிட்டுப் பேசியிருக்க மாட்டாங்க. சிவகார்த்திகேயன் மாதிரியே நானும் ஹீரோ நடிக்க ஆரம்பிச்சதால அவரோட ரூட்டை நான் பாலோ பண்றேன்னு மத்தவங்க நெனைக்கிறது நியாயம் தானே? என்றார் மா.கா.பா.

சரி நடிக்க வந்ததும் சிவகார்த்திகேயன் என்ன சொன்னார்? ”எனக்கு நடிக்க வாய்ப்பு வந்த உடனே முதல்ல அவருக்குத்தான் போன் பண்ணினேன். பிரதர் இந்த மாதிரி என்னை நடிக்கக் கூப்பிடுறாங்கன்னு சொன்னேன். ”ஓ.கே வாழ்த்துக்கள் பிரதர், நல்ல படங்களா பார்த்து பண்ணுங்க”ன்னு வாழ்த்தினார் என்றார்.

படத்துல ஹீரோ ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றவர். அந்த வேலையைச் செய்றவங்களுக்கு வாய் தான் மூலதனம். அந்தக் கேரக்டர் படபடன்னு பேசுற மா.கா.பாவுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்கிறதுனால அவரை ஹீரோவா தேர்வு பண்ணினேன். என்றவர் கதைக்குள் போனார்.

ஒரு கல்யாண வீட்டுல அழகான பெண்ணை பார்க்கிறார் ஹீரோ. அந்த நொடி மனசுக்குள்ள காதல் வந்துடுது. அந்த கல்யாணம் முடியிறதுக்குள்ள அந்தப் பொண்ணை பிக்கப் பண்றவர் லவ்வை கண்டினியூவ் பண்ணலாம்னு நெனைக்கிறப்போ தான் அவங்க ரெண்டு பேருக்கும் உள்ள உறவுமுறை தடுக்குது.

முறைப்படி அவர் சைட்டடிச்ச பொண்ணு ஹீரோவுக்கு அத்தை முறை வருது. அப்படிப்பட்ட இக்கட்டான சூழல்ல ஹீரோ என்ன முடிவெடுத்தான்கிறது தான் படமே, சீனுக்கு சீனுக்கு ஆளுக்கு ஆள் ஹீரோ ஒவ்வொரு விதமா நடிப்பார். உங்ககிட்ட ஒரு விதமா நடிப்பார், இன்னொருத்தர் கிட்ட இன்னொரு விதமா நடிப்பார். இப்படி ஆளுக்கு ஏத்தமாதிரி நடிக்கிற கேரக்டர் ஹீரோ. அதுக்கு இந்த டைட்டில் ரொம்ப ஆப்டா இருந்ததால் வெச்சுட்டோம் என்றார்.

கூடுதலாக தனக்கு வாய்ப்பு கிடைத்த சுவாரஷ்யத்தையும் பகிர்ந்து கொண்டார் டைரக்டர் காம்ரான், இந்தப்படத்தோட தயாரிப்பாளருக்கு நன்றி சொல்லணும், ஏண்ணா அவரை நான் நேர்ல கூட பார்த்ததில்லை. அவர் வெளிநாட்ல இருக்கார், ஒரு நாள் மிஸ்டு கால் கொடுத்து கதை சொன்னேன். இந்தா இப்போ படம் ரிலீசாகப்போகுது என்றார் உற்சாகமாக!

KarunakaranMa Ka Pa AnanthNavasara Thilagamsrushti dangeகருணாகரன்சிருஷ்டி டாங்கேநவரச திலகம்மா.கா.பா.ஆனந்த்
Comments (0)
Add Comment