மாஸ் ஹீரோயின்! : 55-வது படத்தில் நயன்தாராவுக்கு கிடைத்த பெருமை

ல பேருக்கு உடம்புல மச்சம் எங்க இருக்குன்னு தேட வேண்டியிருக்கும். நயன்தாராவுக்கோ உடம்புல திரும்புன பக்கமெல்லாம் மச்சமா இருக்கு. 25 வயசைத் தாண்டின நடிகைகளே வி.ஆர்.எஸ் வாங்கிட்டு திருமணம், குழந்தை, குட்டின்னு சமூக வாழ்க்கையில செட்டிலாகிட்டாங்க.

ஆனா 30 வயசைத் தாண்டின பிறகும் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி ஹீரோயின்கள் லிஸ்ட்ல முதலிடத்துல இருக்கிறார் நயன்தாரா.

அதற்கு காரணம் அவர் நடிக்கிற படங்கள் செண்டிமெண்ட்டா ஹிட்டாகிறதுங்கிற விஷயம் ஒருபக்கம் இருந்தாலும் சமீபகாலமாக அவர் தேர்ந்தெடுத்து நடிக்கிற படங்களும் கூட வித்தியாசமான திரைக்கதை அம்சத்தோட இருக்கிறதுனால ஹிட்டாகிறதும் இன்னொரு விஷயம்.

கோடிகளில் சம்பளம் வாங்குகிற விரல் விட்டு எண்ணக்கூடிய நடிகைகளில் இருக்கும் நயன் தான் இப்போது இருக்கிற இளவட்ட ஹீரோக்களோட சாய்ஸ். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ்ன்னு எல்லோருமே நயன் கூட ஜோடி போட ஆசைப்படுறாங்க.

இப்படி நயனின் மார்க்கெட் எந்தவித சேதாரமும் இல்லாமல் ஸ்டெடியா இருந்ததாலோ என்னவோ காஷ்மோராவோட சேர்த்து 54 படங்கள் வரைக்கும் நடிச்சி முடிச்சிட்டார்.

தற்போது 55வது படமாக மீஞ்சூர் கோபி இயக்கியுள்ள படத்தில் சோலோவாக கலக்கப் போகும் நயன்தாரா மாஸ் ஹீரோக்கள் போலவே நடிகைகளில் மாஸ் நடிகையாகி விட்டார்.

ஆமாம், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பதையடுத்து அஜித், விஜய், சூர்யா போன்ற மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் பர்ஸ்ட் லுக்கை நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டு ட்ரெண்ட்டிங்கில் ஏற்றுவது போல நயன்தாரா நடித்த இந்த 55 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இன்று நவம்பர் 17-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு ரிலீஸ் பண்ணப்போறதா அப்படத்தை தயாரிச்சிக்கிட்டிருக்கிற கேஜேஆர் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளது.

செம மாஸ்ல்ல…

Actress NayantharaNayantharaNayanthara 55
Comments (0)
Add Comment