நயன்தாரா ஓட்டு போட வர மாட்டாரா?

டிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும் போட்டியிட்டனர்.

பல பிரச்சனைகளுக்கிடையே நடைபெற்ற இந்த தேர்தலில் மூத்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு நடிகர், நடிகையரும் ஆர்வத்தோடு வந்து ஓட்டு போட்டனர்.

ஆனால் நயன்தாரா, த்ரிஷா முன்னணி நடிகைகள் ஓட்டுபோட வரவில்லை. நயன்தாராவை பொதுவெளியில் ராதாரவி கேவலமாக பேசியதாக நடிகர் சங்கத்தில் நயன்தாரா புகார் அளித்தபோது உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள்.

ராதாரவிக்கு கண்டன நோட்டீஸ் அனுப்பினார்கள். விஷால் தயாரிப்பாளர் சங்கத்திலும் இருந்ததால் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்தும் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இப்படி நயன் தாராவுக்கு ஒரு பிரச்சனை என்றதும் குரல் கொடுத்தது நடிகர் சங்கம். அப்படிப்பட்ட சங்கத்துக்கு நடந்த தேர்தலில் ஓட்டுபோட நயன்தாரா வரவில்லை.

நயன்தாராவின் இந்த செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாண்டவர் அணியைச் சேர்ந்த கருணாஸ் ”நயன்தாராவுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது சங்கம் உதவியிருக்கிறது. அப்படியிருக்கும்போது சங்க உறுப்பினராக இருக்கும் நயன்தாரா கண்டிப்பாக இந்த தேர்தலில் ஓட்டு போட்டு தனது கடமையை ஆற்றியிருக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

KarunasMovie NewsNayanthara
Comments (0)
Add Comment