அப்படித்தான் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் தன்னோடு சேர்ந்து நடித்த காமெடி நடிகர் யோகிபாபுவின் நடிப்பைப் பார்த்து வியந்தவர் அவருக்கு புதிய படங்களில் சிபாரிசு செய்து வருகிறார்.
தற்போது நயனின் இந்த குட் புக்கில் விஜய் சேதுபதியும் இடம் பிடித்திருக்கிறார். ‘நானும் ரெளடி தான்’ படத்தில் சேர்ந்து நடித்ததிலிருந்தே விஜய் சேதுபதிக்கும், நயன்தாராவுக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. அந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் திறமையைக் கண்டு வியந்த நயன்தாரா அவருக்குசுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் தெலுங்குப் படம் ஒன்றில் முக்கியமான கேரக்டரில் நடிக்க சிபாரிசு செய்திருக்கிறார்.
அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, தமன்னா என பிரபலங்கள் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு இருமொழிப்படமாக தயாராகிறது.
தமிழில் கைவசம் ஒரு டஜன் படங்களை வைத்திருக்கும் விஜய் சேதுபதியை இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார் நயன்தாரா. இது தவிர கன்னடப்படம் ஒன்றிலும் விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.