நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் மூன்றாவது காதலர் என்றாலும், தனக்கு நயன்தாரா முதல் காதலி என்பதால் அவரை உருக உருக காதலித்து வருகிறார் விக்னேஷ் சிவன்.
மீடியாக்களில் அரசல் புரசலாக வெளியே வந்தஇந்தக் காதல் சமாச்சாரத்துக்கு இருவருமே இதுவரை எந்த மறுப்பும் சொல்லவில்லை.
அதோடு திரைப்பட விழாக்களிலும் ஒன்றாக காட்சி தந்து கொண்டிருக்கிறார்கள். ஆக இருவருமே காதலிப்பது உண்மை தான் என்று உறுதியான நிலையில் சமீபகாலமாக விக்னேஷ் சிவன்,
நயன்தாரா வீட்டிலேயே அவருடன் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வருவதாக கோடம்பாக்கத்தில் பரவலாகப் பேசிக்கொள்கிறார்கள்.
இளம் காதல் ஜோடிக்கு அந்தத் தனிமை இனிமையாக கழிந்து கொண்டிருந்த நிலையில் தற்போது பூஜை அறைக்குள் கரடி நுழைந்த கதையாக இனி நானும் உங்களுடன் தான் சேர்ந்து இருக்கப் போகிறேன் என்று தன் இத்யாதிகள் சகிதம் கிளம்பி நயன்தாரா வீட்டுக்கு வந்து விட்டாராம் விக்னேஷ் சிவனின் அம்மா.
மாமியாரின் வருகையை கொஞ்சமும் எதிர்பார்க்காத நயன்தாரா என்னடா இது நம் தனிமைக்கு வந்த சோதனை என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
தாலியும் கட்ட விட மாட்டேங்கிறீங்க.., தாலி கட்டாம குடும்பமும் நடத்த விட மாட்டேங்கிறீங்க… என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…