தமிழில் ”நேரம்” படத்தில் அறிமுகமான நஸ்ரியா தனுஷின் ”நையாண்டி” படத்தில் இத்துணூண்டு இடுப்புக்காக கூட்டிய பஞ்சாயத்தில் தமிழ்சினிமாவை விட்டே வெளியேறினார்.
சொந்த மாநிலமான கேரளாவுக்கு சென்று மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் அப்படியே நடிகர் பகத் பாஸிலை காதலித்து திருமணம் செய்தார்.
திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது என்று பாஸில் குடும்பத்தினர் கண்டிஷன் போட, அதற்கெல்லாம் ஓ.கே சொல்லித்தான் அந்த திருமணம் இனிதாக நடந்தேறியது.
மாமியார் வீட்டாரின் சொல்படியே திருமணம் ஆன நாள் முதல் இன்றுவரை நடிப்பை விட்டு விலகியிருந்தவருக்கு இப்போது மீண்டும் படங்களில் நடிக்க வேண்டுமென்கிற ஆசை எட்டிப் பார்த்திருக்கிறது.
முதலில் தன் குடும்பத்தினருக்காக பயந்து கொண்டிருந்த பகத்தும் இப்போது மனைவியின் சந்தோஷத்துக்காக படங்களில் நடிக்க பச்சைக்கொடி காட்டியிருக்கிறாராம்.
அமலாபால் போல கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிப்பது என்பது தான் நஸ்ரியாவின் முடிவு.
கெளம்பி வாங்கப்பா… நஸ்ரியா கால்ஷீட் ரெடியாம்…