விஜய் டிவி தொகுப்பாளர் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ராதாராவி மற்றும் நாஞ்சில் சம்பத் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
தொழில்நுட்ப வேலைகள் எல்லாம் முடிந்து சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்திருப்பது ஒட்டுமொத்த படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இதுகுறித்து அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் மேலும் கூறும்போது, “கதை, திரைக்கதை எழுதும்போதே குடும்ப ரசிகர்களுக்கான படமாக இந்தப்படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்.
இப்போது, சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்திருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை எங்களுக்கு மேலும் வலுவாக்குகிறது. படம் 90% நகைச்சுவை மற்றும் ரசிக்கக் கூடிய சுவாரசியமான காட்சிகளை கொண்டிருக்கும், அதோடு படத்தில் ஒரு நல்ல செய்தியும் உண்டு” என்றார்.
படத்துக்கு ஷபீர் இசையமைத்திருக்கிறார். யு.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவும், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பும் செய்திருக்கிறார்கள்.