ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தில் அமிதாப்பச்சன் நடித்த கேரக்டரில் அஜித் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ஹைதராபாத்தில் நீதிமன்ற செட் அமைத்து வாதாடும் காட்சிகள் முழுவீச்சில் படமாக்கப்பட்டு வருகிறது.
வரும் மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்த நாள் அன்று இப்படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது படம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தாமதம் ஆகி வருவது தான் ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டதுக்கு காரணம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.