படம் இந்த வாரம் ரிலீசாவதையொட்டி நம்மை சந்தித்து தயாரிப்பாளர் நிதின் சத்யா பேசியதாவது, “இது ஒரு தயாரிப்பாளரின் தன்னம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதை தாண்டி, சமீப காலங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் லிஸ்டில் ‘ஜருகண்டி’யும் நிச்சயம் இணையும் என்று நம்புகிறேன்.
தொடர்ந்து அவரது மிக நெருங்கிய நண்பரும், நாயகனுமான நடிகர் ஜெய் பற்றி நிதின் சத்யா பேசும்போது, “இந்த படத்தின் மூலம் ஜெய் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருப்பது இந்த படத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை.
உண்மையில், அவர் முன்பு இருந்ததை விட அதிக பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்பட்டார். படப்பிடிப்பு முழுவதும் நல்ல முறையில் நடக்க முழு ஒத்துழைப்பை கொடுத்தார். அவர் தன்னை ஒரு சிறந்த நடிகனாக மேம்படுத்த மிகவும் முயற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார்.
பத்ரி கஸ்தூரி உடன் இணைந்து, தனது சொந்த நிறுவனமான ஸ்வேத் குரூப் சார்பில் ‘ஜருகண்டி’ படத்தை தயாரித்திருக்கிறார் நிதின் சத்யா.