தெலுங்கின் முன்னணி ஹீரோ ராணாவை காதலித்து விழா விழாவாக ஜோடியாக சுற்றிய போது, அவரைத்தான் த்ரிஷா திருமணம் செய்வார் என்று தமிழ் -தெலுங்கு திரையுலகம் எதிர்பார்த்தது.
ஆனால் திடீரென்று ராணாவுடன் காதல் முறிவு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வருண் மணியனுடன் திருமணம் நிச்சயமானது.
அதுவும் சில நாட்களிலேயே முடிவுக்கு வந்து விட, காதலைப்பற்றியோ, திருமணத்தைப் பற்றியோ வாய் திறக்காமல் இருந்தார் த்ரிஷா.
அந்த இரண்டு சம்பவங்களும் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் தனது திருமணம் குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார்.
சரி அவரது நிலை தான் என்ன?
‘சிலர் வாழ்க்கையில் திருமண பேச்சு சந்தோஷத்தை தரும், சிலருக்கு வருத்தத்தை தரும். எனக்கு 2வது விஷயம்தான் நடந்தது. எனவே திருமண எண்ணத்தை தற்போதைக்கு மூட்டை கட்டி வைத்து விட்டேன். அதற்காக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கப் போவதில்லை.
கண்டிப்பாக காதல் திருமணம் செய்யப்போவதில்லை. என் அம்மா யாரை கை காட்டுகிறாரோ? அந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வேன்’ என்கிறார்.
பாவம், பொண்ணு ரொம்ப அடி வாங்கிட்டார் போல…