அதை உணர்ந்ததால் தானோ என்னவோ பிரசாந்த் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜானி’ படத்தில் ஒரு பாடல் கூட இல்லையாம்.
அறிமுக இயக்குனர் வெற்றிச் செல்வன் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரசாந்த் ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்திருக்கிறார். ஸ்டார் மூவி மேக்கர்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்திருக்கிறார்.
”இந்தப் படத்தோட திரைக்கதை ரொம்ப விறுவிறுப்பா போகும். காட்சிகளைப் பார்க்கும் போது அதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். விறுவிறுப்பான காட்சிகளை ரசிப்பதற்கு பாடல்கள் தடையாக இருக்கும் என்பதால் படத்தில் பாடல்களையே வைக்கவில்லை.
மேலும் கதைப்படி பாடல்கள் தேவைப்படவும் இல்லை என்ற பிரசாந்த் நான் இதுவரை 74 படங்கள் நடித்து விட்டேன். அந்தப் படங்களிலிருந்து இந்தப்படம் வித்தியாசமான கதைக்களத்தோடு தயாராகியிருக்கிறது” என்றார்.
படத்தின் டைட்டில் மட்டும் தான் ‘ஜானி’யாம் மற்றபடி இதில் பழைய ‘ஜானி’ படத்தின் சாயல் ஒரு சதவீதம் கூட இருக்காதாம்.
முன்னதாக படத்தின் டீசரை வெளியிட்ட இயக்குனர் மணிரத்னம் பிரசாந்த் உள்ளிட்ட படக்குழுவினரை மனதாரப் பாராட்டியிருக்கிறார். அந்த உற்சாகத்தில் விரைவில் ட்ரெய்லரையும் வெளியிட வேலைகள் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து படம் ரிலீசாக உள்ளது.