பிரபல இயக்குநர்கள் டி.கே.ராஜிவ்குமார் மற்றும் ‘அரண்’ படத்தின் இயக்குநர் ‘மேஜர்’ ரவி ஆகியோரிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய ப்ராஷ் இப்படத்தை இயக்குகிறார். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழி படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் இப்படத்தின் இயக்குநர், ப்ராஷ், இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும், இப்படத்தைப் பற்றி இயக்குநர் ப்ராஷ் கூறுகையில், ”நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையை கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இது, சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன்.
இந்தப் படத்திற்கு கதையின் நாயகனாக ரகுமான் கிடைத்தது பெரிய பலம். நான் கற்பனை செய்து வைத்திருந்த கதாபாத்திரத்தை அச்சு அசலாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரகுமான். கதையின் நாயகியாக ‘நாடோடிகள்’ அபிநயா நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு இருமொழிகளில் மிகுந்த பொருட்செலவில், நவீன தொழில் நுட்பங்களுடன் இந்தப்படம் வேகமாக உருவாகி வருகிறது .