8 விதமான கெட்டப்புகளில் கலக்க வரும் விஜய் சேதுபதி!

வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்கள் தேர்விற்கு பேர் போனவர் நடிகர் விஜய் சேதுபதி.

இவரின் அடுத்த படமான ”ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படமும் அப்படிபட்ட ஒரு வித்தியாசமான படமாகும். இது ஓர் அட்வெஞ்சர் காமெடி படமாகும். இதில் விஜய் சேதுபதி இதுவரை யாருமே செய்திராத, ஒரு சுவாரஸ்யமான பழங்குடி இனத் தலைவராக நடித்துள்ளார்.

இந்த கதாபாத்திரத்திற்காக 8 வெவ்வேறு தோற்றங்களில் கலக்கியிருக்கிறாராம் விஜய் சேதுபதி. இதுகுறித்து படத்தின் இயக்குநர் ஆறுமுக குமார் பேசும் போது ”8 வெவ்வேறு தோற்றங்களில் விஜய் சேதுபதி இக்கதையில் விளையாடியுள்ளார். இப்படத்தின் இயக்குனராக மட்டும் இன்றி அவரது தீவிர ரசிகராகவும் இப்படத்தின் அவரது நடிப்பை மிகவும் ரசித்தேன். இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிக மிக மிக சுவாரசியமானது.

படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்தாகி விட்டது. விஜய் சேதுபதியின் 8 வெவ்வேறு தோற்றங்களும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவரும். இப்படத்தின் இன்னொரு கதாநாயகனான கவுதம் கார்த்திக் சமீபத்தில் சுவைத்த தரமான வெற்றி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவர் மேலும் பல உயரங்களை தொடுவர். தமிழ் சினிமா ரசிகர்களில் ரசனையை மனதில் வைத்து கொண்டே ”ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படமாக்கி உள்ளோம்’ என்றார் ஆறுமுக குமார்.

Gautham KarthikOru Nalla Naal Paathu SolrenOru Nalla Naal Paathu Solren Movie NewsVijay Sethupathy
Comments (0)
Add Comment