தேர்தல் வெற்றிக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு – தெறித்து ஓடிய ஓவியா!

பெண்ணுரிமை என்ற பெயரில் புகை பிடிப்பது, தண்ணி அடிப்பது, கஞ்சா அடிப்பது, லிப் லாக் என எல்லா கேவலமான வேலைகளையும் செய்து விட்டு ’90 எம்.எல்’ பட ரிலீசுக்குப் பிறகு பொது வெளியில் தலைகாட்ட முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் ஓவியா.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு அவரிடமே போய் அரசியல் கட்சிகள் ஆதரவு கேட்ட கூத்தெல்லாம் நடந்தேறியிருக்கிறது.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தங்கள் கட்சியின் சார்பில் பிரச்சாரம் செய்வதற்காக தமிழ்சினிமா நடிகர், நடிகைகளை அணுகி வருகின்றன தமிழகத்திலுள்ள சில பெரிய அரசியல் கட்சிகள்.

அப்படித்தான் நடிகை ஓவியாவிடமும் பிரச்சாரம் செய்ய கேட்டிருக்கிறார்கள். ஆனால் ஓவியாவோ கோடி ரூபாய் கொடுத்தாலும் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்து விட்டேன் என்று கூறி விட்டாராம்.

பிரச்சாரம் என்ற பெயரில் பொதுமக்களை சந்திக்க வேண்டியிருக்கும். 90 எம்.எல். கோபத்தை காட்டி விட்டால் என்ன செய்வது என்கிற பயம் தான் ஓவியாவின் பின்வாங்கலுக்கு முக்கிய காரணமாம்.

அந்த பயம் இருக்கட்டும்!

actress oviyaelection 2019Oviyaparliment election
Comments (0)
Add Comment