‘என் ஃபேஸ்’ தொழில்நுட்பத்தில் திரையில் வலம் வரப்போகும் எம்.ஜி.ஆர்

ந்திய திரையுலகின் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், விரைவில் உலகெங்கும் வெள்ளித்திரையில் புதிய பரிணாமத்தில் ‘என் ஃபேஸ்’ எனும் முற்றிலும் புதிய, அதிஅற்புத தொழிழ்நுட்பத்தின் மூலம் வலம்வர இருக்கிறார்.

மலேசியாவின் சர்வதேச ஊடக தொழிற்நுட்ப நிறுவனம் ஆரஞ்ச் கவுண்டி, இத்தொழில்நுட்பத்தை கொண்டு கடந்த கால கதாபாத்திரங்களை நிழற்பட யதார்த்தத்தின் மூலம் உயிரோட்டமாக திரையில் உருவாக்கும் ஒரு மென்பொருளை வடிவமைத்துள்ளது.

மலேசியாவின் ஆரஞ்ச் கவுண்டி நிறுவனமும், முன்னணி சர்வதேச ஹாலிவூட் VFX தொழில் நுட்ப வல்லுனர்களும் இணைந்து, இந்திய திரையுலகின் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் என்றழைக்கபடும் ராமச்சந்திரன் அவர்களை, ஒரு சர்வதேச திரைப்படத்தின் மூலமாக மக்கள் முன் மீண்டும் உயிரோட்டமாக காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

இந்த சர்வதேச திரைப்படத்தை புகழ்பெற்ற இயக்குனர் பி.வாசு இயக்குகிறார். கதைக்களமும், கதாபாத்திரங்களும் முறையே மலேசியாவிலும், இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய, பிராந்திய மற்றும் சர்வதேச நடிக,நடிகையர்கள் மற்றும் கலைஞர்கள் இதில் பங்குபெற இருக்கிறார்கள்.

சர்வதேச தயாரிப்பான இத்திரைப்படம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து, மற்றும் அமெரிக்காவிலும் படமாக்கப்பட இருக்கிறது.

இத்திரைப்படம் முழுவதுமே முப்பரிமாண ஸ்டீரியோஸ்கோபிக் முறையில் தயாரிக்கப்படுவதாலும், ஒவ்வொரு காட்சியுமே முப்பரிமாண முறையில் காட்சிப்படுத்தப்பட இருப்பதாலும், இது மக்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும்.

ஆரஞ்ச் கவுண்டி தலைமை செயல் அதிகாரி டத்தோ மார்கழி பழனி கூறும் போது, ”இயக்குனர் வாசுவின் தந்தை எம்.ஜி.ஆரின் ஒப்பனை கலைஞராக பணியாற்றிய காரணத்தால், எம்.ஜி.ஆரின் மிக நுண்மையான அசைவுகள், நடத்தைகள், முகபாவங்கள் அனைத்தையும் மிக அருகிலேயே இருந்து, கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பும், அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பும், இயக்குனர் வாசுவிற்கு இயல்பாகவே அமைந்தது.

அதனாலேயே இத்திரைப்படத்தை இயக்குவதற்கு சரியான தேர்வாக அவரை கருதுகிறோம். மேலும் அவரது படைப்புகள் வாசு ஒரு திறமையான இயக்குனர் என்பது பறைசாற்றும் விதத்திலேயே அமைந்துள்ளதால், இத்திரைப்படத்திற்கும் தேவையான தனிச்சிறப்புடைய பங்களிப்பை அவர் தருவார்” என்றார்.

mgrP.vasu
Comments (0)
Add Comment