அவ்ரங்கசீப்பின் ஆற்காடு கோட்டையில் பரமபதம் விளையாடிய த்ரிஷா!

15 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனியிடத்தைப் பிடித்த நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. தற்போது ”பரமபதம் விளையாட்டு” என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பலநூறு வருடங்களுக்கு முன்னர் மன்னர் அவ்ரங்கசீப் ஆண்டு வந்த 200 வருடம் பழமை வாய்ந்த ஆற்காடு கோட்டையில் வைத்து நடைபெற்றது.

முதல்கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

24HRS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நந்தா மற்றும் ரிசார்ட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்துக்கு இசை அம்ரிஷ். ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர். படத்தொகுப்பு பிரேம்.

Paramapadham VilaiyattuParamapadham Vilaiyattu newsTrisha
Comments (0)
Add Comment