இப்படத்தை பிரபல நடிகரான ரமேஷ் அரவிந்த் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ‘பாரீஸ் பாரீஸ்’ என்ற பெயரில் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் தமிழ் காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீஸர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
காரணம் காஜலின் மார்பகத்தை சக நடிகை அமுக்குவது போல அமைந்திருந்த காட்சி தான் அந்த சர்ச்சைக்கு காரணம். இந்தக் காட்சி படத்தில் வைக்க வேண்டிய அவசியமென்ன என்று எல்லோரும் கேள்வி எழுப்பிய நிலையில் ”இந்த காட்சி ஹிந்தியில் வெளியான குயின் படத்திலும் இடம் பெற்றிருந்தது. டீசரில் பார்க்கும் போது அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் படத்தில் பார்க்கும் போது பெரிதாகத் தெரியாது.
இந்த காட்சிக்கு முன்பும் பின்பம் என்ன நடந்தது என்று படத்தில் பார்த்தால் யாரும் விமர்சிக்க மாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார் படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த்.