தேசிய விருது பெற்ற ‘உப்பென்னா ‘ படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடிக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரணின் 16 வது படமாக தயாராகும் இந்த திரைப்படத்தில் இணைந்திருக்கும் இந்த கூட்டணி, வெள்ளித்திரையில் புயலை கிளப்ப தயாராக உள்ளனர். இந்த பான் இந்திய திரைப்படத்தை பான் இந்திய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது. இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார்.
இந்த படத்தில் பல்வேறு திரைப்பட துறைகளை சார்ந்த மிகவும் பாராட்டப்பட்ட விரும்பப்படும் நடிகர்களையும் ஒன்றிணைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் ‘குளோபல் ஸ்டார் ‘ராம் சரணுடன் கன்னட மெகா ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ,ஜெகபதி பாபு ,திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் திறமை வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் இணைந்திருக்கிறார்கள். ஆஸ்கார் விருதினை வென்ற ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். அதனால் இப்படத்தின் இசை – மறக்க முடியாத இசை தொகுப்பை வழங்கும் என்பதை உறுதி செய்கிறது. ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருதினை பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனித்துக் கொள்கிறார். இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக அவினாஷ் கொல்லாவும் இணைந்திருக்கிறார்.
பெடி ( PEDDI) பற்றிய பரபரப்பு ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில் வெளியிடப்பட்டிருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் – படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது. தேசிய விருது பெற்ற திறமையான கலைஞர்களின் குழு படத்தின் பின்னணியில் இருப்பதால் பெடி ( PEDDI) ஒரு மகத்தான படைப்பாக இருக்கும்.