விக்ரம் வீட்டிலிருந்து இன்னொரு ஹீரோ!

‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். விரைவில் அந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் தற்போது விக்ரம் குடும்பத்திலிருந்து இன்னொரு ஹீரோ தமிழ்சினிமாவில் எண்ட்ரி கொடுக்கிறார்.

தாதா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி தற்போது நடிகர் அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் பீட்ரூ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் படம் பொல்லாத உலகில் பயங்கர கேம்.

காமெடி த்ரில்லரான இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, ஜூலி மற்றும் மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இவர்களோடு இப்படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

”நான் நினைத்த கதாபாத்திரத்திற்கு அர்ஜூமன் பொருத்தமாக இருப்பதாக தோன்றியதால் அவரை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்” என்கிறார் படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி முதல் அர்ஜூமன்,ஐஸ்வர்யா தத்தா மற்றும் மொட்ட ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் திருச்சி மற்றும் கோவாவில் படமாக்கப்பட உள்ளது.

Movie Newspollatha ulagil payangara game
Comments (0)
Add Comment