தெலுங்கில் பொட்டு படம் செய்த ‘1 கோடி’ சாதனை!

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’.

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வடிவுடையான் கதை, திரைக்கதை அமைத்து இயக்கும் இப்படம் தமிழில் புதிய சாதனையைச் செய்திருக்கிறது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் வடிவுடையான் சொல்லும் போது, ”ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனையாவது என்பது வரம் மாதிரி. எல்லா படங்களும் விற்பனையாகி விடுவதில்லை.

ஆனால் எங்களுடைய பொட்டு படம் பரபரப்பாக விற்பனையாகி விட்டது. மனிதர்கள் செய்யும் சாகசங்களை விட பேய்கள் செய்யும் சாகசங்கள் மக்களிடம் அதிகமாக வரவேற்பு கிடைக்கிறது. அதனால் பொட்டு படம் விற்பனையில் சாதனை படைத்து கொண்டிருக்கிறது.

தெலுங்கில் என்.கே.ஆர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் பொட்டு படத்தை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்.

தெலுங்கில் சென்சார் ஆன உடனே எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

BharathIniyaNamithaPottuPottu Movie newssrushti dange
Comments (0)
Add Comment