கல்யாணம் வந்தார்; கலரே மாறிடுச்சு! : இன்னும் புதுசா… பிரசாத் லேப் ப்ரிவியூவ் தியேட்டர்!

ரு தியேட்டருக்கு போய் படம் பார்க்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை அங்கு திரையிடப்படும் திரைப்படங்கள் மட்டும் கொடுப்பதில்லை.

மாறாக அந்த தியேட்டரை நிர்வகிக்கும் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களின் உபசரிப்பும் முக்கிய பங்கு வகிக்கும்.

கல்யாணம் நிர்வாகியாக இருந்த வரை நுங்கம்பாக்கத்தில் இருந்த போர் ப்ரேம்ஸ் ப்ரிவியூவ் தியேட்டருக்கு படம் பார்க்க வரும் திரையுலக பிரபலங்கள், முக்கிய அரசு அதிகாரிகள், சென்சார் போர்டு உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு எந்தக் குறையும் இருந்ததில்லை. தாணும் பம்பரமாக சுழல்வதோடு தனது ஊழியர்களையும் நாலா பக்கமும் விரட்டி விரட்டி வேலை வாங்குவார்.

அப்படி ஒரு உபசரிப்போடு தியேட்டரை நிர்வகித்து வந்த கல்யாணம் இப்போது சாலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் லேப் ப்ரிவியூவ் தியேட்டரின் நிர்வாகியிருக்கிறார்.

தான் நிர்வாகியாக பொறுப்பேற்றவுடன் செய்த முதல் வேலை. பல ஆண்டுகளாக எந்த மாற்றத்தையும் கண்டிராமல் இயங்கிக் கொண்டிருந்த தியேட்டரின் உள் கட்டமைப்பை மாற்ற ஆரம்பித்தது தான்.

தனது முதலாளி ரமேஷ் பிரசாத்திடம் அதற்காக அனுமதி வாங்க, இப்போது சுமார் 1 கோடி ரூபாய் செலவில் தன்னை முழுமையாகப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது பிரசாத் லேப் ப்ரிவியூவ் தியேட்டர்.

பழைய இருக்கைகளுக்குப் பதில் உயர்ந்த தரத்திலான புத்தம் புதிய குஷன் இருக்கைகள்.

200 பேர் வரை உட்கார்ந்து படம் பார்த்து ரசிக்கும் விதமாக இருக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.

புதுப்பொலிவு பெறும் பிரசாத் லேப் ப்ரிவியூவ் தியேட்டர்!

பழைய திரை அகற்றப்பட்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய திரை போன்ற புதிய வசதிகளுடன் படம் பார்ப்பவர்களுக்கு சிறந்த ஒலியமைப்பை கொடுக்கும் நோக்கில் டால்பி அட்மாஸ் என்ற புதிய ஒலி அமைப்பும் இந்த தியேட்டரில் நிறுவப்படுகிறது. இதற்காக பழைய ஸ்பீக்கர்கள் அகற்றப்பட்டு புத்தம் புதிய ஸ்பீக்கர்கள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் டால்பி அட்மாஸ் ஒலி அமைப்பில் தயாராகும் படங்களையும் இந்த தியேட்டரில் பார்த்து ரசிக்கலாம். அது மட்டுமல்லாமல் 4K தரத்திலான புரஜெக்டரும் இங்கு அமைக்கப்படுகிறது. இதன் மூலம் இங்கு 4K தரத்தில் தயாரான படங்களைக் கூட இங்கு பார்த்து ரசிக்கலாம்.

மேலும் இங்கு இதுவரை PXD தொழில்நுட்பத்தில் தயாராகும் படங்கள் மட்டுமே திரையிட முடியும் என்கிற நிலையை மாற்றி இனி க்யூப் QUBE தொழில்நுட்பத்தில் தயாராகும் படங்களையும் திரையிட முடியும் என்கிற கூடுதல் வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் கல்யாணம் வந்தார்… தியேட்டரோட கலரே மாறிடுச்சே… என்று படம் பார்க்க வருபவர்கள் வியக்கும் வண்ணம் இஞ்ச் பை இஞ்ச் மாற்றம் கண்டு கொண்டிருக்கிறது பிரசாத் லேப் ப்ரிவியூவ் தியேட்டர்.

இன்னும் ஒரு வார காலத்துக்குள் தியேட்டர் முழுமையாக தயாராகி விடும். அப்போது திரைப்படத்தை அதன் இயல்பு மாறாமல் முழுமையாக லயித்து பார்த்த அனுபவம் கிடைக்கும் என்பது உறுதி!

KalyanamPrasad LabPrasad Lab Theatreகல்யாணம்பிரசாத் லேப்பிரசாத் லேப் தியேட்டர்
Comments (0)
Add Comment