தமிழில் நோ சான்ஸ் : பாலிவுட்டுக்கு ஓட்டமெடுத்த ப்ரியா ஆனந்த்

ஜெய் நடித்த வாமனன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த்.

குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டிலான பெண்ணாக இருந்தாலும் பூர்வீகம் தஞ்சாவூர் தானாம், பல பேட்டிகளில் அவரே இந்த விஷயத்தைச் சொல்லி பெருமைப்பட்டிருக்கிறார்.

கவர்ச்சியோ, குடும்பப் பாங்கோ எந்த கேரக்டராக இருந்தாலும் முக சுளிக்காமல் எதிர் நீச்சல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் எதிர்பார்த்த பெரிய ஹீரோக்களின் படங்கள் அமையவில்லை.

இதனால் வாய்ப்புகளே அமையாமல் இருந்த ப்ரியா ஆனந்த்துக்கு தான் நடிக்கும் முத்துராமலிங்கம் படத்தில் நாயகி சான்ஸ் வாங்கி கொடுத்தார் கெளதம் கார்த்திக்.

அந்தப்படமும் ஃபைனான்ஸ் பிரச்சனைகளால் தடுமாறிக்கொண்டிருக்க, இனி தமிழை நம்பினார் வேலைக்கு ஆகாது என்று நினைத்தவர் கன்னடம், மலையாளம், ஹிந்தி என மற்ற மொழிப்படங்களில் நடிக்க வாய்ப்பு வேட்டையாடி வருகிறார்.

அப்படி தேடியதில் மூன்று மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்து வரும் ப்ரியா ஆனந்த் தமிழில் நடித்து வரும் முத்துராம லிங்கம் படக்குழுவினரிடம் சீக்கிரமே என் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி விடுங்கள். மற்ற மொழிகளில் நடிக்கப் போய் விட்டதால் மீண்டும் தமிழுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை என்று சொல்லியிருக்கிறாராம்.

அவருக்காக ரெகமண்ட் செய்த கெளதம் கார்த்திக் தான் ப்ரியா ஆனந்த்தின் செயலை நினைத்து கையை பிசைந்து கொண்டிருக்கிறார்.

Actress Priya AnandPriya Anand
Comments (0)
Add Comment