பெண் காவலர்களின் துயர் துடைத்த அரசுக்கு தயாரிப்பாளர் பாராட்டு!

பெண் போலீசாரின் பெருந்துன்பங்களில் ஒன்று பிரபலங்கள் வரும்போது பாதுகாப்பிற்காக சாலைகளில் நிற்பது…
அதிலென்ன இருக்கிறது என சாதாரணமாகக் கடந்து போகும்போது… ஒரு சின்ன சிக்கல் எவ்வளவு பெரிய வலியையும் அவஸ்தையையும் தருகிறது என்பதை மிக மிக அவசரம் படத்தில் சொல்லியிருந்தோம்.

ரொம்ப சின்ன கதைக் கருதான். ஆனால் அதன் பின்னிருந்த அழுத்தமான வலி பெரு வெற்றியைத் தந்தது.
திரையரங்கில் ஓடியதைவிட, இன்று இந்த அறிவிப்பால் உண்மையாகவே பெருமைகொள்கிறேன். மகிழ்கிறேன்.
பெண்போலீசார் சாலையோர பாதுகாப்பில் ஈடுபட வேண்டாம் என அறிவித்திருக்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. ஸ்டாலின் க்கும்… மரியாதைக்குரிய டிஜிபி -க்கும் மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். .

– சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்/ இயக்குநர்

m k stalinproducer suresh kamatchi