வரிச்சலுகைக்காக மட்டும் தமிழில் டைட்டில் வைக்கக் கூடாது! : கெளதம் மேனன்களின் தலையில் கொட்டிய ஆர்.கே.செல்வமணி

‘சரோஜா’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் T. சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்கு இது வெள்ளி விழா ஆண்டு.

இந்த வெள்ளி விழா ஆண்டில் அந்நிறுவனம் சார்பில் காதலும், காமெடியுமாக ஜனரஞ்சமாகத் தயாராகியிருக்கும் படம் தான் ”ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்.” அதர்வா முரளி, சூரி, ரெஜினா, அதீதி போஹன்கர், பிரணீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைப்பில் ஓடம் இளவரசு படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய FEFSI தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி வரிச்சலுகைக்காக படத்தின் டைட்டிலை மட்டும் தமிழில் வைக்கும் கெளதம் மேனன் போன்ற இயக்குநர்களின் தலையில் கொட்டு வைப்பது போலப் பேசினார்…

இப்படத்துக்கு ”ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்” என்ற மிகச்சிறப்பான தலைப்பு தமிழில் உள்ளது அதை GGSR என்று ஆங்கிலத்தில் அழைப்பது தவறாகும்.

வரிச்சலுகைக்காக தமிழில் பெயர் வைக்கக்கூடாது. தமிழ் மேல் பற்றோடு நாம் தமிழில் தலைப்பு வைக்க வேண்டும். தமிழ் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் எல்லோரும் தமிழில் பெயர் வைக்க வேண்டும்.

தயாரிப்பாளர் சிவா இசையமைப்பாளர் இமானுக்கு சம்பளமே கொடுக்க வேண்டாம். அப்படி கொடுத்திருந்தால் திருப்பி வாங்கி விடுங்கள். இப்படி நான்கு கதாநாயகிகளோடு சேர்ந்து அவர் இருக்கும் புகைப்படத்தை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக உள்ளது. எனக்கு முதல் படம் கிடைக்க காரணமாக இருந்தவர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தான். அவர் தான் தயாரிப்பாளர் ராவுத்தரிடம் பேசி எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கி தந்தார்.

அந்த படம் இடையில் வேறொரு இயக்குநரிடம் போனது. அந்த சமயத்திலும் தயாரிப்பாளர் ராவுத்தரிடம் பேசி மீண்டும் எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கி தந்தவர் சிவா அவருக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றார்.

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் இசை வெளியீட்டு விழாவுக்கு இடையே இயக்குநர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, படத்துக்கு இசையமைக்கும் சத்யா ராஜ், ரம்யா கிருஷ்ணன், சிவா, கயல் சந்திரன், ரெஜினா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Gemini Ganeshanum Suruli Raajanum Audio and Trailer LaunchGGSRR.K.Selvamani Speech
Comments (0)
Add Comment