ஆர்.கே.சுரேஷுக்கு பிறந்தநாள் ஆசி வழங்கி ‘வேட்டை நாய்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாலா

இதுவரை தயாரிப்பு, விநியோகம் என்று வேறு வேறு தளங்களில் இயங்கி வந்த ”ஸ்டுடியோ 9” சுரேஷ், இயக்குநர் பாலா மூலம் ‘தாரை தப்பட்டை’யில் அறிமுகமான பின் வரிசையாகப் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். வில்லனாக நடித்து வந்தவர், இப்போது நாயகனாகி ‘தனி முகம்’, ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த ‘வேட்டை நாய்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று இயக்குநர் பாலா வெளியிட்டிருக்கிறார். இன்று மே-19 ஆர்.கே.சுரேஷின் பிறந்த நாள் ஆகும்.

தன்னைச் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய குருநாதரும் தன் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அண்ணனுமாகிய பாலா ஆசியுடன் வெளியிடப்படுவது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியது என மகிழ்கிறார் சுரேஷ். இந்த நாள் படங்கள் வெளியாகும் வெள்ளிக்கிழமையாகவும் அமைந்து இருப்பதில் ஆர்.கே.சுரேஷுக்கு கூடுதல் மகிழ்ச்சி.

இந்நிகழ்வில் இயக்குநர் ஜெய்சங்கர், ஒளிப்பதிவாளர் எம்.முரளி, வில்லன் நடிகர் விஜய் கார்த்திக் தாய் மூவீஸ் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட ‘வேட்டை நாய் ‘படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

Director BalaR. K. SureshVettai NaaiVettai Naai Movie First Look Launch
Comments (0)
Add Comment