‘ராதே ஷியாம்’ மார்ச் 11 அன்று வெளியாகிறது !

யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷியாம்’ திரைப்படம் மார்ச் 11 அன்று பல்வேறு மொழிகளில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.’ராதே ஷியாம்’ படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முழு நீள காதல் கதையில் பிரபாஸ் நடிப்பதால் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.இப்படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

Actor Prabhasactress Pooja Hegdedirector Radha Krishna KumarRadheShyam movieUV Creations