காலம் வெல்லுமா? காதல் வெல்லுமா?

திரையில் விடை சொல்ல வருகிறது பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமா கொண்டாடும் நாயகனாக உருவெடுத்திருக்கிறார் பிரபாஸ். வீரமும் சண்டைக்காட்சிகளும் நிறைந்த படங்களில் நடித்து அனைத்து இதயங்களையும் திருடிய பிரபாஸ், ஒரு அழகான காதல் கதையுடன் அதே இதயங்களை வருட வருகிறார். ராதாகிருஷ்ணாவின் இயக்கத்தில் பூஜா ஹெக்டேவுடன் ஜோடி சேர்ந்து யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் காதல் காவியம் ராதேஷ்யாம்.

காலம் வெல்லுமா? காதல் வெல்லுமா? எனும் கேள்விக்கு வெள்ளித் திரையில் விடைகூற வருகிறது ராதே ஷ்யாம். ஜஸ்டின் பிரபாகரன் மற்றும் தமனின் மனதை உருக்கும் இசையில், மதன் கார்க்கியின் வசனம் மற்றும் பாடல்களில் ஒரு மாபெரும் வண்ணத் திரைக் கவிதையாக உருவெடுத்துள்ள இந்தத் திரைப்படம் இந்த மார்ச் 11 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.

Actor Prabhasactress Pooja Hegdedirector Radha Krishna KumarRadheShyam movieUV Creations