வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் ‘ஆக்‌ஷன்’ படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்!

‘முனி, காஞ்சனா, காஞ்சனா 2’ ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய ராகவா லாரன்ஸ் அடுத்து வேந்தர் மூவீஸ் நிறுவனத்திற்காக புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.

ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’, விஷால் நடித்த ‘பூஜை, நான் சிகப்பு மனிதன்’, உள்ளிட்ட பல படங்களை ரிலீஸ் செய்த இந்நிறுவனம் தற்போது விஷால் நடித்து வரும் ‘பாயும் புலி’ படத்தைத் தயாரித்து வருகிறது.

இந்த படத்தையடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. வேந்தர் மூவீஸ் சார்பாக எஸ்.மதன் தயாரிக்கும் இந்தப்படம் ஒரு முழு ஆக்‌ஷன் த்ரில்லராக தயாராக உள்ளது.

படத்தில் நடிக்கும் கதாநாயகி, மற்ற நட்சத்திரங்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாக உள்ளது.

Raghava LawrenceVendhar Movies Producer S Madhan
Comments (0)
Add Comment