ஆதரவை விட எதிர்ப்பு அதிகம்! : ’மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கு லாரன்ஸ் குட்பை!

பல கட்ட பஞ்சாயத்துகளைத் தாண்டித்தான் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் இன்று உலகமெங்கும் ரிலீசானது.

ரசிகர்கள் மத்தியில் கிடைத்த  அந்த ஏகோபித்த வரவேற்பை ருசிக்க வேண்டிய லாரன்ஸ், படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட பட்டத்தால் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆமாம், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் இயக்குநர் சாய் ரமணி படத்தின் டைட்டிலில் ராகவா லாரன்ஸ் பெயருக்கு முன்னால் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்கிற பட்டத்தைக் கொடுத்திருக்கிறார்.

இன்று முதல் ஷோ தியேட்டர்களில் போடப்பட்டதும் அந்த டைட்டிலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்களில் பெரும்பாலானோர் லாரன்ஸுன் இந்த ‘சூப்பர் ஸ்டார்’ ஆசைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ நான் தான் என்கிற பஞ்சாயத்தில் விஜய் – அஜித் பெயர் அடிக்கடி அடிபடும். ‘சூப்பர் ஸ்டார்’ என்றால் அது ஒருவர் தான். அதுவும் ரஜினி மட்டும் தான் என்று ரஜினி ரசிகர்கள்  அவர்கள் இருவரையும் எச்சரித்து வருகிறார்கள்.

அப்படித்தான் இன்று லாரன்ஸ் பெயர் முன்னாள் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டத்தைப் பார்த்ததும் கடுப்பான ரசிகர்கள் ட்விட்டரில் #MakkalSuperStar என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதில் ராகவா லாரன்ஸை திட்டித் தீர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

சமூகவலைத்தளங்களில் தனக்கு எதிராக கருத்துகள் பரவி வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லாரன்ஸ் அவசரம் அவசரமாக இன்று நிருபர்களை சந்தித்தார். அதில் நான் எப்போதுமே ’சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கு ஆசைப்பட்டதில்லை, அது எனக்குத் தேவையும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர் கூறியதாவது ”இன்று வெளியான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் சாய்ரமணி சமீபகாலமாகவே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க போவதாக சொல்லி கொண்டிருந்தார். அது என்ன என்பது எனக்கு தெரியாது.

ஆனால் இந்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் என் பெயருக்கு முன்னாள் ”மக்கள் சூப்பர் ஸ்டார்” என்று பட்டதை வழங்கி இருக்கிறார். அதுதான் அந்த இன்ப அதிர்ச்சி. அவர் அன்பிற்கு நன்றி.

இருந்தாலும் எனக்கு எந்த ஒரு பட்டமும் வேண்டாம். எப்போதும் இந்த உலகத்தில் ஒரே ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ அது என் தலைவர் ரஜினிகாந்த் மட்டும் தான். அவர் தான் என் குரு, எனக்கு வழிகாட்டி எல்லாமே. எனக்கு இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பட்டம் என் அம்மாவின் பெயர் தான். அதற்கு நிகராக வேறு எந்த பட்டமும் என்னை திருப்திபடுத்தி விட முடியாது.

அதனால் ”கண்மணி” என்ற என் அம்மாவின் பெயரை எனக்கு பட்டமாக நானே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதனால் இனி என் பெயருக்கு முன்னால் பட்டமாக ”கண்மணி” ராகவா லாரன்ஸ் என்று வைத்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அது….!

makkal super starMotta Shiva Ketta ShivaRaghava Lawrence
Comments (0)
Add Comment