இந்த தொழிலதிபர் தொல்லை தாங்க முடியலப்பா… : பிசின் கண்டிஷனில் அசின்

மிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே ஏ.ஆர்.முருகதாஸ் புண்ணியத்தில் ‘கஜினி’ ஹிந்தி ரீமேக்கில் நடிக்கப் போனார் அசின்.

படம் ஹிட்டானதும் தொடர்ந்து வாய்ப்புகள் அமைய மும்பைக்கே சென்றவர் தொடர்ந்து பாலிவுட்டில் சில படங்களில் நடித்தார்.

இருந்தாலும் தமிழ்,தெலுங்கில் கிடைத்தது போல பெரிய வாய்ப்புகள் அமையவில்லை, மாறாக மைக்ரோமேக்ஸ் ஓனர் ராகுல் சர்மா தான் கிடைத்தார்.

அக்‌ஷய்குமார் அறிமுகத்தில் முதலில் நட்பாகி, பின்பு காதலாகி இப்போது திருமணமும் முடிந்தாகி விட்டது.

தம்பதிகள் தேனிலவுக்கு செல்ல தயாராகி வரும் இந்த நேரத்தில் திருமணத்துக்குப் பிந்தைய அசினின் நடிப்பாசைக்கு ராகுல் பெரிய சைஸ் பூட்டைப் போட்டு பூட்டப்பட்டிருப்பதில் கவலையோடு இருக்கிறார்.

திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிக்கலாம் என்று ஆசைப்பட்ட அசின் திருமணம் முடிந்த கையோடு ராகுலிடம் அனுமதி வாங்கி விடலாம் என்று நினைத்தாராம்.

ஆனால் ராகுலோ இனி சினிமாவில் நடிப்பதையே மறந்து விடு என்றவர்,  அடுத்து வைத்தது தான் தொழிலதிபருக்கே உரிய புத்தி!

வேண்டுமானால் நம்ம மைக்ரோமேக்ஸ் ப்ராண்ட்டோட மொபைல் விளம்பரங்களில் நீயே நடி என்று ஆலோசனை கூறியிருக்கிறார்.

ராகுலின் இந்த கடுகளவு மனசைப் பார்த்து நொந்து போன அசின் இந்த தொழிலதிபர் தொல்லை தாங்க முடியலேப்பா… என்று அப்செட்டாகியிருக்கிறார்.

வெல்லம் திங்க ஆசைப்பட்டால் எறும்புக்கடியை வாங்கித்தானே ஆகணும்!

AsinRahul Sarmaஅசின்ராகுல் சர்மா
Comments (0)
Add Comment