அவா ஒரு கோழை, பிராடு நம்பாதீங்கோ… ரஜினி ரசிகர்களை சீண்டிய சு.சாமி!

தொல்.திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தமிழக அரசியல்கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இலங்கை பயணத்தை ரத்து செய்த ரஜினி அடுத்த முறை என்னைத் தடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

அவரது முடிவை தமிழக தலைவர்கள் வரவேற்றாலும், பா.ஜ.க தலைவர்களில் ஒருவராக சுப்ரமணிய சாமி கடுமையாக எதிர்த்திருக்கிறார்.

அதோடு அதுகுறித்து அவர் தெரிவித்த கருத்துகள் தான் ரஜினி ரசிகர்களை கொதிப்படைய வைக்கும் விதமாக இருக்கிறது.

இதுகுறித்து பேசிய சுப்ரமணிய சாமி ”இலங்கை செல்வதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து விட்டு பின்னர் போகாமல் இருப்பது அவரின் கோழைத்தனத்தை காட்டுகிறது.

இது ரஜினியின் உண்மையான முகத்தை காட்டுகிறது. தமிழ் பொறுக்கிகளே.. அவா ஒரு பிராடு எல்லாத்தையும் ஏமாத்துவா நம்பாதிங்கோ…

மேலும், சினிமாவில் மட்டுமே தைரியமாக நடிக்கிறார். நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு கோழையாக நடந்து கொள்கிறார். முதுகெலும்பு இல்லாதவா…

இலங்கை நட்பு நாடு அங்கே செல்வதில் என்ன தவறு இருக்கிறது. என்று ரஜினியை கடுமையாக சாடியிருக்கிறார்.

இவ்ளோ பேசுற சு சாமி ஒரே ஒரு தடவை தமிழ்நாட்டுக்கு வந்து பாருங்கோளேன்…

lycaLyca ProductionsrajiniRajinikanthsubramanian swamySuper Star
Comments (0)
Add Comment