‘பேட்ட’ விழாவில் ரஜினி பேச்சு – த்ரிஷா அப்செட்

சினிமாவுக்கு முழுக்கு போடுவதற்குள் ஒரு படத்திலாவது ரஜினிக்கு ஜோடியாக நடித்து விட வேண்டும் என்பது தான் த்ரிஷாவின் கனவு.

அவரது கனவை ‘பேட்ட’ படத்தில் நிறைவேற்றியிருக்கிறார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்.

இந்தப் படத்தில் த்ரிஷாவோடு, சிம்ரனும் நடித்திருப்பதால் இதில் திரிஷா யாருக்கு ஜோடி என்று தெரியாமல் இருந்தது.

அந்த ரகசியத்தை சில தினங்களுக்கு முன்பு நடந்த பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சொன்னார் ரஜினி. விழாவில் அவர் பேசும்போது ”பேட்ட படத்தில் த்ரிஷா எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ப்ளாஷ்பேக் காட்சிகளில் கொஞ்ச நேரம் அவர் வருகிறார்” என்றார்.

ஒரு பக்கம் ரஜினியுடன் ஜோடி சேர வேண்டும் என்கிற தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டாலும், படத்தில் தான் கொஞ்ச நேரம் தான் வருகிறோம் என்கிற உண்மையை ரசிகர்கள் மத்தியில் ரஜினி சொன்னது த்ரிஷாவுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்திருக்கிறதாம்.

உண்மையைப் பேசுனா எப்பூட்டு கோபம்?

PettaPetta Audio LaunchRajinikanthTrisha
Comments (0)
Add Comment