எல்லாம் சரியா போய்க்கிட்டிருக்கு, ஆனா… – நிம்மதி இழந்து தவிக்கும் ரஜினி!

ரு வழியாக போர் வந்து விட்டது, இனி குதித்து விட வேண்டியது தான் என்று தீவிர அரசியலில் இறங்கி விட்டார் ரஜினி.

”என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்?” என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தவர், அரசியலுக்கு வருகிற முடிவை எடுத்ததும் ”எம்ஜிஆர் ஆட்சியை தமிழக மக்களுக்கு தரப்போகிறேன் வித் ஆன்மீகத்தோடு” என்று சமீபத்தில் ஒரு விழாவில் முழங்கினார்.

ரஜினியின் இந்த வேகத்தைப் பார்த்து உற்சாகமடைந்திருக்கும் அவரது ரசிகர்கள் மாவட்டம் வாரியாக கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்கள்.

இப்படி ரஜினியின் அரசியல் மூவ் எல்லாமே பாசிட்டீவ்வாக போய்க் கொண்டிருக்க, வீட்டுக்குள்ளிலிருந்து தான் தன்னுடைய நிம்மதியைக் கெடுக்கும் சம்பவங்கள் அரங்கேறுவதாக செம மூடு அவுட்டில் இருக்கிறார் ரஜினி.

தூய்மையான ஆட்சியைத் தரப்போகிறேன் என்கிறார் ரஜினி. இன்னொரு பக்கமோ அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மீது கார்ப்பரேஷன் பில்டிங் வாடகை பாக்கி, பள்ளிக்கூட வாடகை பாக்கி, கோச்சடையான் கடன் பாக்கி என சில ஆயிரங்களில் இருந்து பல கோடிகள் வரை அடுத்தடுத்து புகார் செய்திகள் மீடியாக்களில் அடிபடுகிறது.

எவ்வளவு நேரம் பேசினாலும் அசராமல் உட்கார்ந்து அட்வைஸைக் கேட்பார்கள் ரசிகர்கள், ஆனால் என்ன சொன்னாலும் அதைக் கேட்காத பொண்டாட்டியிடம் எப்படி தன் நிலைமையை எடுத்துச் சொல்லுவது? என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறாராம் ரஜினி.

ஓ அதனால தான் நிம்மதியைத் தேடி மறுபடியும் இமயமலைக்கு போய்ட்டீங்களா தலைவா!

rajinirajini familyRajini PoliticsRajinikanth
Comments (0)
Add Comment