உலக அளவில் வசூல் சாதனை : கமல் – அஜித்தை பின்னுக்கு தள்ளிய ரஜினி – விஜய்!

மிழகம் மட்டுமின்றி இந்தியாவையும் தாண்டி இன்றைக்கு தமிழ்சினிமாவின் வியாபாரம் உலக அளவில் பரவி விட்டது.

அதிலும் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர்களின் படங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்து வருகிறது.

என்னதான் இந்த நான்கு ஹீரோக்களுக்கும் போட்டியிருந்தாலும் உலக அளவில் வெளிநாட்டு வியாபாரங்களில் ரஜினி, விஜய் படங்களே முதல் ஐந்து இடங்களைப் பிடித்து சாதனை படைத்து வருகிறது.

சமீபத்தில் ரிலீஸான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’யின் வெளிநாட்டு உரிமை ரூ.34 கோடிக்கும், லிங்கா ரூ.27 கோடிக்கும் எந்திரன் ரூ.23 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.

அதே போல் இளைய தளபதி விஜய்யின் ‘தெறி’ ரூ.18 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. மேலும் விஜய்யின் அடுத்த படமான விஜய் 60 படமும் ரூ.16.75 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது.

இப்படி வெளிநாட்டு வியாபாரத்தை பொறுத்தவரையின் ரஜினியும், விஜய்யும் தான் முதல் ஐந்து இடங்களைப் பிடித்திருக்கிறார்கள்.

அஜித், கமல், சூர்யா போன்றவர்கள் எல்லாம் அடுத்தடுத்த இடங்களில் தான் இப்போதும் இருக்கிறார்களாம்.

AjithkumarAK 57KabalikamalhaasanRajinikanthvijayVijay 60
Comments (0)
Add Comment