புது மருமகனுக்காக பட வாய்ப்பு தேடும் ரஜினிகாந்த்

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்பு ரஜினியிடமிருந்து திடீர் அழைப்பு வந்ததும் ஓடோடிச்சென்றிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அந்த சந்திப்பில் தன்னுடைய புது மருமகன் விசாகனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கச் சொல்லி ரஜினி கேட்டதாக கூறப்படுகிறது.

மூத்த மகள் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் முன்னணி ஹீரோவாக இருப்பது போலவே இளைய மகள் செளந்தர்யாவின் கணவரையும் தமிழ்சினிமாவில் முன்னணி ஹீரோவாக்கி பார்க்க ஆசைப்படுகிறாராம் ரஜினி. அதற்காக ஆரம்பகட்ட வேலை தான் இந்த சிபாரிசு என்கிறார்கள்.

ரஜினியே சொல்லி விட்டதால் மறுப்பேதும் சொல்ல முடியாத கார்த்திக் சுப்பராஜ் தற்போது விசாகனுக்காக ஒரு கதையை தயார் செய்து கொண்டிருக்கிறாராம்.

Karthik SubbarajMovie NewsrajiniRajinikanthvisakan
Comments (0)
Add Comment