ஏறுகிற விழா மேடைகள் குறைவாக இருந்தாலும் எல்லா மேடைகளிலும் தனது ரசிகர்களுக்கு குட்டி குட்டிக் கதைகளாகச் சொல்லி ”வாழ்க்கையில் நீங்கள் இப்படியெல்லாம் இருங்கள்” என்று அட்வைஸ் செய்வார் ரஜினி.
ஆனால் ஊருக்கு உபதேசம் சொன்ன ரஜினி, தனது பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்ல மறந்து விட்டார் போல. அதனால் தான் தனது இளைய மகள் செளந்தர்யாவின் டைவர்ஸ் விவகாரத்தால் கடந்த சில தினங்களாக நிம்மதியை இழந்து தவிக்கிறார்.
வழக்கமாக அமைதி வேண்டும் என்றால் இமயமலை, ரிஷிகேஷ் என்று ஆன்மீக வாசனை நிரம்பிய ஏரியாக்களுக்கு சென்று வரும் ரஜினி செளந்தர்யா விவகாரத்தால் ரொம்பவே அப்செட்டாகி மதமே மாறி விட்டார் என்கிறார்கள். இந்து மதத்திலிருந்து ரஜினி கிறிஸ்துவ மதத்துக்கு மாறி விட்டார் என்பது தான் போயஸ்கார்டனில் லேட்டஸ்ட் பரபரப்பாக இருக்கிறது.
கிறிஸ்துவ மதத்துக்கு மாறுபவர்கள் ஞானஸ்நானம் எடுப்பது போல ரஜினியும் ஞானஸ்நானம் எடுப்பது போன்ற புகைப்படம் சமூகவலைத் தளங்களில் பரவி வருகிறது. கூடவே அதில் ரஜினி ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டார் என்கிற தகவலும் இடம்பெற்றிருக்கிறது.
போயஸ்கார்டனில் ஆரம்பித்த இந்த பரபரப்பு அவரது ரசிகர்கள் மத்தியிலும் பற்றிக் கொள்ள, நல்ல வேளையாக ரஜினி மாதம் மாறவில்லை என்கிற தகவலும் அவர் தரப்பிலிருந்தே சொல்லப்படுகிறது.
அப்படியானால் அந்தப் புகைப்படம்?
”கபாலி” படப்பிடிப்பு முடிந்த பிறகு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற ரஜினி அங்கு 50 நாட்கள் தங்கியிருந்தாரல்லவா? அப்போது அங்குள்ள சர்ச்சுக்கு அவரை அழைத்த அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்களாம். அந்தப் புகைப்படம் தான் தற்போது வெளியாகியிருக்கிறது என்கிறார்கள்.
அதோடு அந்த சர்ச்சுக்கு சென்ற ரஜினி தனக்கு உடல்நலம் முழுமையாக குணமடைந்தால் கிறிஸ்துவ மதத்துக்கு மாறுவதாக வேண்டிக் கொண்டார் என்றும் அந்த வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டே அவர் அமெரிக்காவின் நியூயார்க் சபையில் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டார் என்றும் இன்னொரு விளக்கத்தைக் கொடுக்கிறார்கள்.
நிம்மதியே ரஜினி பக்கம் கொஞ்சம் வாயேன்…
ஆடியோ வடிவில் செய்தியைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும் >>> :