கட்சி அறிமுகம் எப்போது? – இதுதான் ரஜினியின் திட்டமாம்!

மிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் முன்னெப்போதும் இல்லாத தைரியத்தோடும், துணிச்சலோடு களமிறங்கியிருக்கிறார் ரஜினிகாந்த்.

இதற்காக, மாநிலம் முழுவதும் உள்ள தனது ரசிகர் மன்றங்களை ஒன்றிணைக்கும் வகையில் தனது மன்றத்தின் பெயரை ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றி மாவட்டம் தோறும் ஒன்றிய, நகர, வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

இந்த நிர்வாகிகள் நியமனப் பணியை சமீபத்தில் ரஜினியு மக்கள் மன்றத்தில் சேர்ந்து செயலாளர் ஆன ராஜுமகாலிங்கம் மற்றும் பொறுப்பாளர் சுதாகர் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் அன்மீக சுற்றுப்பயணம் சென்று பயணத்தை முடித்து சென்னை வந்துள்ள ரஜினி மூத்த அரசியல்வாதிகள் தனது அரசியல் நண்பர்கள், என அனைவரையும் தனித்தனியாக ரகசியமாக சந்தித்து பேசுவது மட்டுமல்லாமல் தொலைபேசி மூலமாகவும் ஆலோசனை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

அதன்படி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றையே தனது முதல் கட்சி மாநாடாக மாற்றிய எஸ்.வி.எஸ் கல்லூரி அதிபரை தனது சென்னை போயஸ் தோட்டத்துக்கு வரவழைத்து சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் ரஜினி. இந்த சந்திப்பின் போது தேசிய கட்சியை சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவரும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனையில் இணைந்தாராம். அந்த ஆலோசனையின் முடிவில் திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி கட்சியை அறிமுகம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

‘காலா’ படம் ரிலீசானதும் கட்சிப் பெயரை அறிவிக்க திட்டமிட்டிருக்கிறார் ரஜினி. அதற்கான மாநாட்டுச் செலவுகளை எஸ்.வி.எஸ் கல்லூரியின் உரிமையாளர் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறாராம். கட்சி அறிமுக நாள் மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேரை ஒரே இடத்தில் கூட வைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

rajiniRajini Makkal MandramRajini PoliticsRajinikanth Politics
Comments (0)
Add Comment