மீண்டும் ராணாவுடன் நெருக்கம் காட்டும் த்ரிஷா!

துவரை எல்லா பார்ட்டிகளிலும் இருவரையும் ஜோடியாகப் பார்க்க முடிந்தபோது கண்டிப்பாக ராணா – த்ரிஷா காதல் ஜோடி சீக்கிரமே கல்யாணத்தில் இணைவார்கள் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

யாருடைய கொள்ளிக்கண்கள் பட்டதோ? திடீரென ஜோடி பிரிந்தன.

அதோடு த்ரிஷாவின் வீட்டில் சென்னை தொழிலதிபர் வருண்மணியனை அவருக்கு நிச்சயம் செய்தனர். அதுவும் கூட எண்ணெய்ச்சட்டியில் போட்ட கடுகாட்டம் சில நாட்களிலேயே கருகியது.

இப்போது எந்த திருமணப் பேச்சும் இல்லாமல் இருக்கும் த்ரிஷா பழையபடி தனது நெருங்கிய நண்பர் ராணாவுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்திருக்கிறார்.

பிரிந்த ஜோடி மீண்டும் இணைந்து காட்சி தரும் போது பார்க்கிற வாய்கள் சும்மா இருக்குமா?

மறுபடியும் நீங்க ஒண்ணு சேர்ந்துட்டீங்க, இப்பவாவது மேரேஜ் பண்ணிப்பீங்களா? என்கிற கேள்வி திரும்ப திரும்ப த்ரிஷாவை நோக்கி வருகிறதாம்.

ஆனால் இந்த முறை ரொம்பவே தெளிவாக இருக்கிறார் த்ரிஷா.

ராணா என்னுடைய நெருங்கிய நண்பர், அந்த உறவு மட்டுமே தொடர்கிறது, மற்ற உறவுமுறைகள் எல்லாமே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்கிறார் த்ரிஷா.

பாவம் அதுவும் எத்தனை பேர்கிட்ட தான் ஏமாறும்?

Rana DaggubatiTrisha Krishnan
Comments (0)
Add Comment