ரெஜினாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் : யாருப்பா அந்த அதிர்ஷ்டசாலி?

 

 

சோஷியல் மீடியாக்களில் இருக்கும் சினிமா பிரபலங்கள் பரபரப்பை கிளப்ப திடீர் திடீரென்று எதையாவது செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

டாப்லெஸ் போஸ், அல்லது யாராவது பிரபலத்துடன் நெருக்கமாக இருப்பது போல போட்டோக்களை வெளியிட்டு பப்ளிசிட்டி தேடுவது என செய்வார்கள். ஒரு சிலர் திருமணம் செய்து விட்டேன் என்றெல்லாம் கூட கிளப்பி விடுவார்கள். விசாரித்தால் அது ஏதாவது படத்தின் பப்ளிசிட்டி வேலையாக இருக்கும்.

தமிழில் ‘ராஜா ராணி’ படம் ரிலீஸ் சமயத்தில் ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடக்கப்போகிறது என்பது போல அப்படத்தின் இயக்குநர் அட்லி செய்தியை கிளப்பி விட்டு பப்ளிசிட்டி செய்த சம்பவமெல்லாம் திரையுலக வரலாற்றில் உண்டு. அப்படி ஒரு பரபரப்பைத் தான் சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டரில் ஏற்படுத்தினார் ரெஜினா.

நிச்சயதார்த்த தினத்தில் மோதிரம் மாற்றிக் கொள்வது போன்ற ஒரு போட்டோவை வெளியிட்ட ரெஜினா ‘இந்த நல்ல நாளில் உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எனக்கு தேவை. எனக்கு மோதிரம் அணிவிப்பது யார் என்பது விரைவில் உங்களுக்கு தெரிய வரும். அவரை காண்பதற்காக உங்களை காக்க வைக்க மாட்டேன்’ என அந்தப் படம் குறித்து விளக்கம் கொடுத்திருந்தார்.

அவர் அந்தப் போட்டோவை வெளியிட்ட சில நிமிடங்களுக்குள்ளாகவே தெலுங்கு ஊடகங்கள் ரெஜினாவுக்கு திருமணம் என்று செய்தியைப் பரப்ப அடுத்த அரை மணி நேரத்தில் அந்தப் போட்டோவையும் அது சம்பந்தமாக தான் போட்ட கமெண்ட்டையும் நீக்கி விட்டார் ரெஜினா.

சாய் தரம் என்ற தெலுங்கு ஹீரோவை ரெஜினா காதலித்த விஷயம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது பிரேக் அப் ஆகி விட்டது. பிரேக் அப் ஆன அந்தக் காதல் தான் மீண்டும் மலர்ந்து நிச்சயதார்த்தத்தில் முடிந்திருக்கிறது என்கிறார்கள் சிலர்.

இதனால் ரொம்பவே குழம்பிப் போன ரசிகர்கள் இது ரெஜினா நடிக்கும் ஏதோவொரு படத்தின் காட்சியாக இருக்கலாம். படத்தின் பப்ளிசிட்டிக்காக ரெஜினா இப்படி ஒரு ஸ்டண்ட்டை செய்தாலும் செய்திருக்கலாம் என்கிற கோணத்திலும் சந்தேகப் பார்வை பார்க்கத் தவறவில்லை. எதுவாக இருந்தாலும் ரெஜினா வாயைத் திறந்தால் தான் இந்த சந்தேகத்துக்கு விடை கிடைக்கும்!

திறந்திடு வாயே..!

Actress Regina CassandraRegina Cassandra
Comments (0)
Add Comment