ஏற்கனவே சினிமாவிலிருந்து ரஜினி, கமல், விஷால் என அடுத்தடுத்த நடிகர்களில் வருகை ஆளும் கட்சி, எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் எரிச்சலடையை வைத்திருக்கும் நிலையில் ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் குறித்தான அறிவிப்பும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஆனால் நான் அரசியலுக்கு வரவில்லை. மாறாக அது சம்பந்தமான ஒரு படத்தில் தான் நடிக்கிறேன். அந்தப் படத்துக்கான விளம்பரம் தான் அது என்று சுவர் விளம்பர ரகசியத்தை உடைத்தார்.
மேலும் அவர் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரியா ஆனந்த் அவருக்கு அரசியல் பாடம் சொல்லி கொடுப்பது போலவும் ஏ ஃபார் அரசியல், பி ஃபார் பினாமி மற்றும் சி ஃபார் கமிஷன் என்று கரும்பலகையில் எழுதியிருப்பது போன்றும் ஒரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
கண்டிப்பாக இந்தப் படம் சம கால அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவையாக சொல்லும் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தப்படம் கன்னடத்தில் வெளியான ‘ஹம்புல் பொலிட்டிஷியன் நொக்ராஜ்’ என்ற படத்தை தமிழில் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.