அரசியலில் குதித்தார் ஆர்.ஜே.பாலாஜி! – மகளிர் அணி தலைவி யார் தெரியுமா?
சில தினங்களுக்கு முன்பு ‘இளைஞர்களை வழி நடத்த.. தமிழகத்தில் மாற்றம் காண..’ என ஆர்.ஜே.பாலாஜியை வரவேற்று எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே சினிமாவிலிருந்து ரஜினி, கமல், விஷால் என அடுத்தடுத்த நடிகர்களில் வருகை ஆளும் கட்சி, எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் எரிச்சலடையை வைத்திருக்கும் நிலையில் ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் குறித்தான அறிவிப்பும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஆனால் நான் அரசியலுக்கு வரவில்லை. மாறாக அது சம்பந்தமான ஒரு படத்தில் தான் நடிக்கிறேன். அந்தப் படத்துக்கான விளம்பரம் தான் அது என்று சுவர் விளம்பர ரகசியத்தை உடைத்தார்.
எல்.கே.ஜி என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். அவர் தான் தனது கட்சியின் மகளிர் அணி தலைவி என்று அறிவித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
மேலும் அவர் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரியா ஆனந்த் அவருக்கு அரசியல் பாடம் சொல்லி கொடுப்பது போலவும் ஏ ஃபார் அரசியல், பி ஃபார் பினாமி மற்றும் சி ஃபார் கமிஷன் என்று கரும்பலகையில் எழுதியிருப்பது போன்றும் ஒரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
கண்டிப்பாக இந்தப் படம் சம கால அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவையாக சொல்லும் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தப்படம் கன்னடத்தில் வெளியான ‘ஹம்புல் பொலிட்டிஷியன் நொக்ராஜ்’ என்ற படத்தை தமிழில் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.