டேனியல் பாலாஜி நடித்த ‘ஆர் பி எம்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ‘ஆர் பி எம் ‘ ( R P M )என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான மோஷன் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” நடிகர் டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம் இது. இதில் அவர் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் நடித்திருந்ததை போல், அழுத்தமான வேடத்தில் நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கிரைம் வித் சஸ்பென்ஸ் திரில்லராக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறேன்” என்றார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. விரைவில் படத்தின் டீசர் ,ட்ரெய்லர் ஆகியவை வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

Actor danial balajiRPM movie