“ஆர்ஆர்ஆர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் !

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் இப்போது அதன் பரந்த பிளாக்பஸ்டர் திரைப்பட வரிசையில் மற்றொரு தலைசிறந்த படைப்பான RRR, “ஆர்ஆர்ஆர்” படத்தை இணைத்துள்ளது. நம் நாட்டின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான SS ராஜமௌலி இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோருடன் ஆலியா பட் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அனைத்து மொழிகளிலும் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது குறிப்பிடதக்கது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த தலை சிறந்த காவியத்தை, அதன் சந்தாதாரர்களுக்குக் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது. இப்படத்தில் அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, ஷ்ரேயா சரண் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். எம்.எம்.கீரவாணியின் அசத்தலான இசையும், மதன் கார்க்கியின் அட்டகாசமான வசனங்களும், பிரமாண்டமான காட்சியமைப்பும் திரைப்பட ரசிகர்களுக்கு அசாத்தியமான சினிமா அனுபவத்தை அளித்தன.

Actor junior NTRActor Ram Charanactress Alia Bhattdirector rajamouliDisney+ HotstarRRR Movie