‘ருத்ரமாதேவி’க்கு அமெரிக்காவில் கிடைத்த ரிசல்ட்!

ல தடவை ரிலீஸ் தேதிகள் முடிவு செய்யப்பட்ட மிகப்பெரிய சரித்திரப்படமான ருத்ரமா தேவி ஒரு வழியாக கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசானது. இப்படம் வெளிநாடுகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

குறிப்பாக படத்தில் இடம்பெற்றிருக்கும் 3டி காட்சிகளை வெளிநாட்டு சினிமா ரசிகர்கள் வெகுவாக ரசிக்கிறார்களாம்.

அமெரிக்காவில் படம் ரிலீசான இரண்டே நாட்களில் 2 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது.

இதுவரை 3டி தொழில்நுட்பத்தில் தயாரான படங்கள் தெலுங்கில் ரிலீசானதில்லை. அந்த வகையில் ஆந்திர தேசத்திலும் ருத்ரமாதேவிக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளின் படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்த படக்குழுவினர் இன்னும் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்.

தமிழில் ருத்ரமாதேவி வருகிற 16-ம் தேதி ரிலீசாகிறது.

anushkaRudhramadevi
Comments (0)
Add Comment