அவரெல்லாம் வேற ரேஞ்ச்! : எஸ்.ஜே.சூர்யாவை புலம்ப விட்ட விஜய்!

லத்த பல சர்ச்சைகளை கிளப்பிய கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ திரைப்படத்தில் நடிகர், நடிகைகளின் பங்களிப்பு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

குறிப்பாக அதில் ஒரு இயக்குநராக நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் இயல்பான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல், திரையுலகினர் மத்தியிலும் பெரிதாக கவனத்தை ஈர்த்தது.

இந்த நல்ல நடிகர் என்கிற பெயரை வாங்கிய மகிழ்ச்சியில் இருக்கும் அவர் விஜய்யை வைத்து குஷி 2 படத்தை இயக்குவதற்குத்தான் கடந்த பல மாதங்களாக காத்துக் கொண்டிருந்தார். ஆனால் விஜய்யோ தனது 60-வது படத்தை இயக்கும் வாய்ப்பை பரதனுக்கு கொடுத்து விட்டார்.

இதில் அப்செட் ஆன எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து ஒரு புதுப்படத்தை இயக்கும் வேலையில் முழுமையாக இறங்கியிருக்கிறார்.

‘குஷி’ படத்தைப் போலவே இரண்டு வெவ்வேறு குணங்கள் கொண்ட நாயகன் – நாயகி இடையிலான காதல் கதையை, ஆக்‌ஷன் கலந்து தரப்போகிறாராம். ஸ்ருதிஹாசனை நாயகியாக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்தக்கதையும் விஜய் நடிக்க தோதானதாக இருந்தாலும் அவரிடம் மீண்டும் போய் நிற்க விரும்பாத எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் தயாரானவுடன் இந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்து அதில் தானே ஹீரோவாகவும் நடிக்கப் போகிறாராம்.

IlayathalapathyiraiviS.J.Suryavijayஇறைவிஇளைய தளபதிஎஸ்.ஜே.சூர்யாவிஜய்
Comments (0)
Add Comment