வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் புதிய படம்!

Maha Movies நிறுவனத்தின் சார்பில், திரு.மகேந்திர நாத் கோண்ட்லா தயாரித்து அனில்காட்ஸ் இயக்கி வரும் “சபரி” படத்தில் வரலட்சுமி சரத்குமார் இதுவரை கண்டிராத புதுமையான வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை மகரிஷி கோண்ட்லா வழங்குகிறார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் இந்தப் படம், உகாதி தினத்தன்று வெகு சிறப்பாக துவங்கப்பட்டு , தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் துவக்கத்தை குறிக்கும் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். சுவாரசியமான இந்த போஸ்டர் பார்வையாளர்களின் கவனத்தை எளிதில் கவர்ந்து ஈர்ப்பதாக, அமைந்துள்ளது.

Actress 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓director anilkatzSabari movie